நாசாவின் ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள், நிலாவின் பின்புறத்தை சுற்றிவந்த பின் பூமியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டனர். நிலாவின் மறுபுறம் பயணித்தபோது ஏற்பட்ட திட்டமிட்ட வானொலி இடைவெளியே இந்தத் தொடர்பு துண்டிப்புக்கு காரணமாக இருந்தது.
ஓரியன் விண்கலத்திலிருந்து மௌனத்தை முறித்த கிறிஸ்டினா கோக், "பூமியிலிருந்து மீண்டும் குரல் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.
நிலாவின் பின்புறம் பறந்தபோது, ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தொலைவை எட்டியது — இது மனித இனம் பூமியிலிருந்து பயணித்த மிக நீண்ட தொலைவுக்கான புதிய சாதனையாகும்.
நாசா தெரிவிக்கும் படி, அந்த தொலைவு 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) ஆகும்.
0Likes
0Dislikes
