ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

21 ஜூன், 2026, 09:25 AM
அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமுறை அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திமுகவும் அதிமுகவும் சட்டமன்றத்தில் ஒரே வரிசையில் அமர வேண்டிய சூழலைக் காலம் ஏற்படுத்திவிட்டது என்றும், இதைப் பார்க்கும் இரு கட்சித் தொண்டர்களும் தாங்கள் இணைந்துவிட்டதாகவே நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினால்தான் திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்களே வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் திருச்சி கிழக்கு உட்பட 6 தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, இடைத்தேர்தலிலேயே அதிமுக கூட்டணிக்கு திமுக தயாராகிறதா? இதற்காக ஆர்.எஸ்.பாரதி மூலம் அக்கட்சி ஆழம் பார்க்கிறதா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திமுக, அதிமுக என்ற 2 கட்சிகளுக்கும் சேர்த்து குறைந்தது 45 சதவிகித ஓட்டு வங்கி இருப்பதாக கூறப்படுவதால் விஜய்க்கு பதிலடி கொடுக்க கழகங்கள் இணைகின்றனவா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...