வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானி நிம்மகண்டி மகேந்திரா தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவின் கூற்றுப்படி, கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகுவதால் அட்லாண்டிக் கடல் நீரோட்டம் பலவீனமடைந்து இந்தக் குளுமைப் பகுதி உருவாகிறது. இது வளிமண்டலக் காற்று அலைகள் மூலம் இந்தியப் பருவமழைப் பொழிவை மாற்றியமைக்கிறது.இந்த மாற்றத்தால், 1999 முதல் வடமேற்கு இந்தியாவில் மழை 25 சதவீதம் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், விவசாயப் பகுதியான இந்தோ-கங்கைச் சமவெளியில் மழை குறைந்து வறட்சி நிலவுகிறது. தற்போதைய வானிலை ஆராய்ச்சிக் கணினிகளால் அட்லாண்டிக் கடலில் நிகழும் இந்த மாற்றங்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், அவை கணித்துக் கூறும் எதிர்கால வானிலை அறிக்கைகளை முழுமையாக நம்ப முடியாது என்று விஞ்ஞானி மகேந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
0Likes
0Dislikes
