இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொடர் ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது.
சுப்மன் கில் தலைமையில், ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்காத விராட் கோலி, இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், பும்ரா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Likes
0Dislikes
