பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகையின் போது காஜு கத்லி இனிப்பு அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மோதிச்சூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமுன் ஆகியவையும் மக்களால் அதிகம் விரும்பப்பட்டன. உணவகங்களில் இருந்து மசாலா தோசை மற்றும் பன்னீர் பட்டர் மசாலா உணவுகள் அதிக அளவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
பண்டிகை காலத்தில் பெரிய அளவிலான ஆர்டர்களும் பதிவாகியுள்ளன. ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் ஒருவர் 57 பாக்கெட் இனிப்புகளை ரூ. 41,895-க்கு வாங்கியுள்ளார். அதேபோல், மும்பையில் வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 41,772 மதிப்பிலான ஏழு இனிப்பு ஹேம்பர்களை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு டெலிவரி செய்வது மட்டுமின்றி, உணவகங்களுக்குச் சென்று உணவருந்தும் பழக்கமும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் 'டைன்அவுட்' (Dineout) தளத்தில் உணவக முன்பதிவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




