மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் சுமார் 24 மணிநேரம் டீம்ஸ் (Teams), அவுட்லுக் (Outlook) மற்றும் கோபைலட் (Copilot) ஆகிய சேவைகள் முடங்கின. இந்த பாதிப்பு சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், நெட்வொர்க் திறன் மேம்பாட்டுப் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் , இதற்காக வருகிறோம் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சேவைகள் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், எனினும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்த காலக்கெடுவை நிறுவனம் அறிவிக்கவில்லை.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களைப் பாதித்தது. இந்தியாவில் இண்டிகோ (IndiGo) மற்றும் ஆகாசா ஏர் (Akasa Air) உள்ளிட்ட விமான நிறுவனங்களின் மின்னஞ்சல் ஆதரவு அமைப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டன, இருப்பினும் விமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. நிதிச் சேவைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர் தொடர்பு கருவிகளை அணுகுவதில் சிரமங்களைச் சந்தித்தன. டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் அவுட்லுக் சேவை தொடர்பாக 1,30,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. சேவைகளை நிலைப்படுத்த, ஒரே நேரத்தில் அனைத்தையும் சரிசெய்யாமல், படிப்படியாகச் சீரமைக்கும் முறையை மைக்ரோசாப்ட் கையாண்டு வருகிறது.


