2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா இணைந்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இந்தத் தொடர் அக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. மேலும், 2029-ஆம் ஆண்டு அக்டோபர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
1987, 1996, 2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை நடத்தவுள்ளது. அதேபோல், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நடத்துகிறது. இதன் மூலம் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2035-ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, 2028-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும், 2030-இல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்திலும் டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ளன. மேலும், 2029 மற்றும் 2031-ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்தவுள்ளது.




