19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி வெளிப்படுத்திய கொண்டாட்டங்கள், லீக் சு போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்திய தரக்குறைவான வார்த்தைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக இந்திய பேட்ஸ்மேன் யஷ்வீர் கவுட் தெரிவித்துள்ளார். தீபாவளி அன்று நடைபெற்ற அந்த லீக் போட்டியில் தோல்வியடைந்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்திய வார்த்தைகளால் இந்திய வீரர்கள் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், அதற்கு இறுதிப் போட்டியில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
லீக் சுற்றில் பாகிஸ்தான் அணி எப்படி நடந்துகொண்டதோ, அதே பாணியில் பதிலடி கொடுக்க இந்திய அணி திட்டமிட்டதாக யஷ்வீர் கவுட் குறிப்பிட்டார். இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என வீரர்கள் உணர்ந்ததாகவும், அந்த தருணம் உணர்ச்சிகரமானதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 337 ரன்கள் இலக்கை, கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் எட்டி இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.



