பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானத்தை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவம் வெளியிட்ட தகவலில், அந்த விமானத்தை பின்தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்கியதாகவும், இதனால் விமானி அவசரகால தரையிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க போர் விமானங்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஈரான் கூறுவது போன்ற எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் அகமது வஹிதி நிலத்தடி ஏவுகணை தளத்தைப் பார்வையிட்ட சமயத்தில் வெளியாகியுள்ளது.




