ETN NewsNews. Trust. Impact.
FIFA 2026

ஜாம்பவான்களின் இறுதி உலகக்கோப்பை: மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார்

10 ஜூன், 2026, 09:59 AM
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த உலகக்கோப்பையை கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டு உலகக்கோப்பையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன; பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32இல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி தகுதி பெறாதது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் முதல்முறையாக இந்த உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. கால்பந்து உலகையே ஆட்சி செய்த மூன்று ஜாம்பவான் வீரர்களுக்கு இதுவே இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உலக கால்பந்தில் இருபெரும் துருவங்களாக விளங்கும் 38 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி மற்றும் 41 வயதான போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே இறுதிக்கோப்பை என்பது உறுதியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் பிரான்ஸை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதன்மூலம் மெஸ்ஸி தனது நீண்டநாள் கனவான உலகக்கோப்பையை வென்று தனது கால்பந்து வாழ்க்கையை முழுமையாக்கினார். மறுபுறம், அனைத்து முக்கியக் கோப்பைகளையும் வென்ற ரொனால்டோவுக்கு, உலகக்கோப்பை மட்டுமே இதுவரை வெல்லாத ஒரே முக்கியக் கோப்பையாகும். இதனால் இந்தக் கோப்பையை வெல்ல அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மற்றொரு ஜாம்பவான் வீரரான 34 வயதான பிரேசில் அணியின் நெய்மாருக்கும் இதுவே இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நெய்மார் தொடர்ந்து காயங்களில் சிக்கி வருவதோடு, அவரது திறமையும் கடுமையாகச் சரிந்துள்ளது. வினீசியஸ் ஜூனியர், ரபீன்கா, மார்டிநெலி, குன்கா போன்ற உலகத்தரம் வாய்ந்த அட்டாக்கிங் வீரர்களுக்கும், இளம் வீரரான என்ரிக்குக்குமே அணியில் இடம் வழங்கப்படும் என்றும், நெய்மாருக்கு இடம் கிடைக்காது என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், உலகின் மிகச்சிறந்த பயிற்சியாளரான கார்லோ அன்சிலோட்டியின் தனிப்பட்ட விருப்பம் காரணமாக நெய்மாருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் வழங்கப்பட்டது. அடுத்த உலகக்கோப்பையில் நெய்மாருக்கு 38 வயதாகிவிடும் என்பதோடு, அவரது காயம் மற்றும் திறமை இன்னும் மோசமடையவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் நெய்மாருக்கும் இதுவே இறுதி உலகக்கோப்பை எனப் பரவலாகக் கருதப்படுகிறது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...