அமெரிக்காவில் ஜெனரிக் மருந்து இறக்குமதி தொடர்பான புதிய கொள்கையை அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். அதன் பிறகு, ஒரு ஆண்டிற்கு 100 சதவீதமும், அதைத் தொடர்ந்து 200 சதவீதமும் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள்ளேயே மருந்து உற்பத்தி ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்கத் தவறும் நிறுவனங்கள் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. அமெரிக்க பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் இலக்கு என்று அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாடு முழுவதும் மருந்து உற்பத்தி ஆலைகளின் கட்டுமானம் தற்போது விரிவடைந்து வருவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்





