டால்கம் பேபி பவுடர் பயன்பாட்டால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, 5.5 பில்லியன் டாலர் (சுமார் 52,000 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது. அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 69,000 வழக்குகளில், 95 சதவீத மனுதாரர்கள் இந்தத் தீர்வுக்குச் சம்மதித்தால் மட்டுமே இது இறுதி வடிவம் பெறும்.
டால்கம் பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை என அந்நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும், 2023-ஆம் ஆண்டில் உலக அளவிலும் இந்தத் தயாரிப்பின் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முழுமையாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






