எச்.சி.எல் நிறுவனத்துடனான தனது வருடாந்திர அவுட்சோர்சிங் ஒப்பந்த மதிப்பை கூகுள் நிறுவனம் ரூ.1,900 கோடியிலிருந்து ரூ.475 கோடியாகக் குறைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.
முன்னதாக, அப்ளிகேஷன் டெவலப்மென்ட் உள்ளிட்ட பணிகளுக்காக எச்.சி.எல் நிறுவனத்திற்கு ரூ.1,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கூகுள் வழங்கி வந்தது.
இந்த ஒப்பந்தக் குறைப்பால், கூகுள் பணிகளில் ஈடுபட்டு வந்த சுமார் 1,000 எச்.சி.எல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்





