இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு நீக்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்படி, தற்காலிகப் பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் எவ்விதத் தடையுமின்றி நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



