பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினாவை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தகவலைத் தம்பதியினர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருமண மோதிரங்கள் அணிந்த தங்களது கைகளின் புகைப்படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



