சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விலை உயர்ந்த நிலையில், அதைத் தொடர்ந்து சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. எனினும், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.13,860-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
0Likes
0Dislikes
