தலித் சமூகத்தினரை திராவிடக் கட்சிகள் பரிதாபத்தின் அடிப்படையிலேயே அணுகுவதாக அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார்.
பொதுத் தொகுதிகளில் தலித் சமூகத்தினரை போட்டியிட வைப்பதை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பெருமையாகப் பேசுவதை சுட்டிக்காட்டிய அவர், இது கொள்கை ரீதியானதா அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவா என கேள்வி எழுப்பினார்.
கிராமப்புறங்களில் தலித் சமூகத்தினர் முன்னேற்றமடைவதை இழிவாகப் பார்க்கும் போக்கு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த தி.மு.க. ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், தற்போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள சூழலில் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே தற்போதைய அரசின் கொள்கை என அவர் தெரிவித்தார்.



