நேபாளத்தில் இயற்கை பேரிடரால் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர்கள் நான்கு பேர் டெல்லி செல்கின்றனர். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.
மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், அங்குள்ள சூழலை தொடர்ந்து கண்காணிக்கவும் இந்த அமைச்சர்கள் குழு டெல்லி சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.




