நேபாளத்தில் கோஷி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரசூவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள பேரிடர் மேலாண்மைக் குழு வலியுறுத்தியுள்ளது.




