நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 753 பேர் மாயமாகியுள்ளனர்.
இதில் 164 நேபாள நாட்டவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 589 வெளிநாட்டவர்களும் அடங்குவர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாயமான வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக 183 இந்தியர்கள் உள்ளனர். மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த 64 பேரும், உக்ரைனைச் சேர்ந்த 62 பேரும், மலேசியாவைச் சேர்ந்த 55 பேரும் மாயமாகியுள்ளனர்.
பேரிடரில் சிக்கியவர்களில் 228 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேருடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






