உக்ரைன் தலைநகர் கீவ் புறநகரில் உள்ள மைலா கிராமத்தில், ராணுவ வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலால் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த முதியோர் இல்லம் மற்றும் 50 குடியிருப்புகள் தரைமட்டமாகின.
இந்த கோர விபத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த 34 முதியவர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட கிராமத் தலைவர் உட்பட மொத்தம் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியிலிருந்து 370 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


