வடக்கு சைப்ரஸ் கடற்கரை அருகே 279 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துருக்கியின் தாசுசு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கவிழ்ந்த படகின் மேற்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


