இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது ஜூலை மாதத்தில் பதிவான 23.66 பில்லியன் பரிவர்த்தனைகளை விட அதிகம் என்பதுடன், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22 சதவீத வளர்ச்சியாகும். இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.
29.82 லட்சம் கோடியாக உள்ளது. இது மே மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான ரூ. 29.9 லட்சம் கோடி என்ற உச்ச அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், ஆண்டு அடிப்படையில் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அன்றாட பயன்பாடு அதிகரிப்பு மற்றும் ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகை கால நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு யுபிஐ சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.





