தமிழக முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்துவதாகக் கூறி, மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையில் இதுவரை 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அறக்கட்டளை மூலம் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குவதாகவும், தொழில் தொடங்க கடன் உதவி அளிப்பதாகவும் கூறி மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. இதற்காகப் பதிவு கட்டணமாக 1,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.



