ETN NewsNews. Trust. Impact.
Sports

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

14 ஜூன், 2026, 05:00 AM
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறும் 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குருப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோதுகின்றன. 24 நாட்கள், 33 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்கிய இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குருப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குருப் பி-யில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகத்துடன் இருக்கும். இதனால் பெரிய ஷாட்கள் அடிக்க எளிதாக இருக்கும். அதேநேரத்தில், ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும் என்பதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பந்து பழையதாகும்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு க்ரிப் கிடைக்கலாம். முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 145 ரன்கள். இந்த மைதானத்தில் சேஸிங் செய்த அணிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இரு அணிகளும் 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...