முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்சூமர் புரோடக்ட்ஸ் நிறுவனம், 'பாம்பே கிரீமரி' என்ற புதிய பிராண்டின் மூலம் இந்திய ஐஸ்கிரீம் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. இந்த ஐஸ்கிரீம்களின் விலை 10 ரூபாயிலிருந்து தொடங்கும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐஸ்கிரீம்களை, விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 'கேம்பா' குளிர்பானம் மற்றும் 'இன்டிபென்டன்ஸ்' பிராண்ட் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்களை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ், தற்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய முயற்சியின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கனவே சந்தையில் முன்னணியில் உள்ள அமுல், வதிலால் இண்டஸ்ட்ரீஸ், மதர் டெய்ரி மற்றும் ஹட்சன் அக்ரோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ளது.






