தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆவின் விற்பனை நிலையங்களைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் வணிக ரீதியிலான உரிமையாளர் (franchisee) முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள், அவர்களுடன் வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை எளிதாகப் பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

