புதுக்கோட்டையில் அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்து 9 மாணவிகள் காயமடைந்தனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவிகளை நடத்துநர் கீழே இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்காலிக நடத்துநர் மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பேருந்து ஓட்டுநர் அர்ஜுனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
