மாநிலம் முழுவதும் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 250 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.130 கோடி செலவில் பிரம்மாண்டமான பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், பசுமைத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
