புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பழங்குடியின மாணவியர், பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மாணவியர் படுகாயமடைந்தனர்.
இந்தச் செயலை மனிதநேயமற்ற கொடூரச் செயல் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடுமையாகக் கண்டித்துள்ளார். கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் சமூகம் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் என்று அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

