இந்தியாவில் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினரை, அதாவது 600 ஊழியர்களை பேபால் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து முன்னறிவிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை (ஆகஸ்ட் 31) அழைப்பு ஒன்றில் இணையுமாறு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் மணி கன்ட்ரோல் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்த அழைப்பின்போது தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், உடனடியாக நிறுவனத்தின் கணினி அணுகல் வசதிகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.




