தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.irctc.co.in என்ற இணையதளத்திலோ அல்லது IRCTC Rail Connect செயலி மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 139 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
