திமுக கட்சி சீரமைப்பில் பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி எழுந்துள்ள சூழலில், உட்கட்சி தேர்தலை நேரடியாக நடத்த கனிமொழி வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இத்தேர்தலை நேரடியாக நடத்தினால் கட்சியின் பல இடங்களில் மோதல்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், அவசர அடிப்படையில் கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
