புக்கெட் நகரிலிருந்து டெல்லிக்கு ஏஐ2379 விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா விமானி சுதீப் வசிஷ்டா, பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
விமானத்தை இயக்கி வந்தபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமானி சுதீப் வசிஷ்டாவின் உடலில் மனோவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீதான பணிநீக்க நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.





