ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 'ஈக்வல் எர்த்' (Equal Earth) எனப்படும் புதிய உலக வரைபடத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டங்களின் பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய வரைபடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவு பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களின் அளவு குறைக்கப்பட்டும் காட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய வரைபடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இந்த முடிவுக்கு வாஷிங்டன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


