தமிழகத்தில் இன்று 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்சியில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதர இடங்களில் பாளையங்கோட்டையில் 103.82 டிகிரி, ஈரோட்டில் 103.64 டிகிரி, கரூர் பரமத்தியில் 102.56 டிகிரி, வேலூரில் 101.48 டிகிரி மற்றும் சேலத்தில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

