எல் நினோ பாதிப்பால் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடும் வெயில் மற்றும் வறட்சியுடன் பலத்த காற்றும் வீசுவதால், பொது இடங்களில் நெருப்பு மூட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு மூட்டுவதன் மூலம் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சிட்னி நகரில் நெருப்பு மூட்டுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


