அரசியல் ஆதாயங்களுக்காகப் பொதுமக்களையோ அல்லது பெண்களையோ தரக்குறைவாகப் பேச வேண்டாம் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் தற்போது ஆபாசமும் வன்மமும் நதியென ஓடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நம் வீடுகளில் உள்ள தாய், அக்கா, தங்கை எனப் பெண்களை மனதில் வைத்துப் பொறுப்புடன் பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.

