மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குறித்து கவிஞர் கண்ணதாசன் கூறிய கருத்துகளைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப்பழகிய பை என திமுகவை அவர் கடுமையாகச் சாடினார். சட்டப்பேரவையில் காவலர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், மக்களைக் காக்கும் காவலர்களைக் காப்பது அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார்.

