சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் 15 நிமிடங்கள் தாங்கள் அமைதி காத்து வந்ததாகவும், அதன் பிறகு எந்தவித ஆதாரங்களும் இன்றி திமுகவினர் மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதை உணர்ந்து செயல்படுமாறு ஏற்கனவே தான் அறிவுறுத்தியிருந்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், திமுக மீது பழி சுமத்துவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இருப்பினும், தற்போதும் திமுக ஆட்சி நடைபெறுவது போன்றே முதல்வர் விஜய் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
