சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையின் போது, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கைப் படித்தது மரபை மீறிய செயல் என திமுக கொறடா எ.வ.வேலு விமர்சித்துள்ளார். விசாரணையில் உள்ள ஒரு வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் நேற்று சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அந்தப் பதிலுரையின் போது, அமலாக்கத்துறை வழக்கைப் படித்தது மரபுக்கு எதிரானது என எ.வ.வேலு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.


