கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியைக் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிராமப்புற நுகர்வோரின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விரைவாக சிலிண்டர்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


