சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.255 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


