சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையைச் சூழ்ந்து முழக்கமிட்டனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் சபாநாயகரை நோக்கி நெருக்கமாகச் சென்றார்.
தன்னை நோக்கி வந்த வசந்தம் கார்த்திகேயனைப் பார்த்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடும் கோபத்துடன் 'Don't come here.. Get out' என்று எச்சரித்தார்.

