வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, அடுத்த 3 மாதங்களுக்குப் பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் பணிகளை அதிகாரிகள் புறக்கணிக்கக் கூடாது என அமைச்சர் விஜய் பாலாஜி வலியுறுத்தினார். மேலும், கவுன்சிலர்களின் வார்டு நிதி தொடர்பான சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
