தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

