தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் நாளை இரவு லண்டன் பயணம் மேற்கொள்கிறார். பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் தொழில் அதிபர்களைச் சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 16-ம் தேதி துபாய் வழியாக அவர் சென்னை திரும்புகிறார்.

