பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக, சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சுகுமார், அவர் செல்லும் இடங்கள் அனைத்திலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். தனது திரையுலக சந்தை சரிந்ததால், முதல்வர் விஜய் குறித்து அவர் இவ்வாறு பேசியிருப்பதாக சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

