மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் சுகந்தி போட்டியிடுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் லட்சுமணன் போட்டியிடுவார் என அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
