பயணிகளை அதிக கட்டணம் செலுத்தத் தூண்டும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டதற்காக ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் செலுத்தினால் சவாரி விரைவாக உறுதி செய்யப்படும் என்றும், 5 நிமிடங்களுக்குள் வாகனம் வரவில்லை என்றால் ரூ.50 பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. இந்த விளம்பரங்கள் குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

